பெண் மேலாளரை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்ஆந்திராவில் வங்கிபெண் மேலாளர் உட்பட 8 பேர் கைது

ஆந்திராவில்வங்கி பெண் மேலாளரை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திட்டம் போட்டு திருடிய வங்கி மேலாளர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். காளாஹாஸ்யில் இயங்கி வரும் தனியார் வங்கிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அறிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் 2 தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஹார்டிஸ்க் மாயமானதை அடுத்து வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். வங்கி மேலாளர் ஸ்வரந்தி என்பவர் தனது நண்பர்களுடன் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதும் பொதுமக்கள் அடமானமாக வைத்து தங்க நகைகளை வேறு வங்கியில் அடமானம் வைத்து அதற்கு பதிலாக போலிகளை வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
Tags :