தமிழக கேரளா எல்லைப் பகுதியில் புலி நடமாட்டம் மக்கள் பீதி.

தமிழக கேரள எல்லை பகுதியான தென்மலைப் பகுதி அடர்ந்த வனப் பகுதியாக அமைந்துள்ளது தென்மலை நீர்தேக்கத்தில் இருந்து ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைகளுக்காகவும் பிற தேவைகளுக்காகவும் பெரிய நீர் தேக்கம் ஒன்று அமைய பெற்றுள்ளது. இந்த நீர் தேக்கத்தில் தற்பொழுது கோடை காலம் என்பதால் நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி உணவு தேடியும் வனவிலங்குகள் நீர்த்தேக்கத்திற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளன. இந்த நிலையில் வட மாநிலங்களில் இருந்து தற்போது இங்கு வன விலங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கு
ஆராய்ச்சி மாணவர்கள் வந்துள்ளனர்.இவர்கள் இன்று தென்மலை நீர்தேக்கம் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பொழுது புலி ஒன்று சாவகாசமாக நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் குடித்துவிட்டு திரும்பி செல்லும் காட்சியை கண்ட ஆய்வு மாணவர்கள் அதனை தங்களது காமிராவில் பதிவு செய்தனர். மேலும் புலியின் நடமாட்டத்தையும் தடத்தையும் அந்த பகுதியில் பதிவானதையும் அவர்கள் தங்களது அலைபேசியில் பதிவு செய்தனர்.தொடர்ந்து புளியின் நடமாட்டம் இரு மாநில எல்லைப் பகுதியில் இருந்து வருவது ஏற்கனவே தெரிந்த விஷயம் கடந்த மாதம் ஆரியங்காவு மற்றும் பகுதியில் புலி ஒருவரது வீட்டில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை அடித்து கொன்று போட்டுவிட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது இதன் காரணமாக வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர் மேலும் தேவையின்றி யாரும் நீர் தேக்கம் பகுதியில் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
Tags :