வேலையில் 5 மணி நேரம் குறைப்பு.. அதிரடி அறிவிப்பு

by Staff / 13-04-2023 05:23:28pm
வேலையில் 5 மணி நேரம் குறைப்பு.. அதிரடி அறிவிப்பு

பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் வார வேலை நேரத்தை குறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சிலி நாட்டில் பணியாளர்களுக்கான வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிலி நாட்டில் ஒரு வாரத்திற்கு 45 மணி நேரமாக இருந்த வேலை நேரம், 40 மணி நேரமாக மாற்றி மசோதா நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து, சிலி நாட்டில் உள்ள சில நிறுவனங்களும் இந்த நடைமுறையை ஏற்றுக் கொண்ட நிலையில், சிறிய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via