சிறுவனுக்கு இரு சக்கர வாகனம் வழங்கிய நபர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு18 வயது நண்பனுடன், 17 வயது சிறுவன் பைக்கில் சென்றுள்ளார். நெடுஞ்சாலையில் அதிவேகமாக அவர்கள் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் பைக், 2 லாரிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ளது. இதில் மீட்கப்பட்ட 18 வயது இளைஞர் வழியிலேயே மரணித்த நிலையில், 17 வயது சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு வாகனம் கொடுத்த வினித் (25) என்பவர் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags : சிறுவனுக்கு இரு சக்கர வாகனம் வழங்கிய நபர் கைது.