மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திவழக்கறிஞர்கள்போராட்டம்.

by Editor / 28-08-2024 12:50:41pm
மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திவழக்கறிஞர்கள்போராட்டம்.

ந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. புதிய குற்றவியல் சட்டங்களால் பல குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்படும் என்று குற்றம்சாட்டும் வழக்கறிஞர்கள், பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலுள்ள பல்வேறுமாவட்டங்களில்  நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ,ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் வாயிலாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திவழக்கறிஞர்கள்போராட்டம்.

Share via