மத்திய அமைச்சர் மீது தாக்குதல் நடத்த முயற்சி

இங்கிலாந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் புறப்பட்டுச் சென்ற ஜெய்சங்கர் காரை, காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் மறித்தார். அதன்பின், இந்திய தேசிய கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்தெறிந்தார். இருப்பினும், பிரிட்டன் காவலர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கைது செய்யாமல் எச்சரித்து விடுவித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :