தரைமட்டமான 3 மாடி கட்டடம்.. மீட்பு பணி தீவிரம்

ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் இன்று மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் என்டிஆர்எஃப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை இருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags :