அண்ணாமலை அறிக்கை உண்மைக்கு புறம்பானது அமைச்சர் காந்தி பதிலடி.

மாநிலத்தில் உள்ள, பல இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். அரசியல் ஆதாயத்திற்காக கண்ணியமற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது, மாநில அளவில் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சித் தலைவருக்கு உகந்ததல்ல.
Tags :