புதிய விதிமுறைகளை வகுத்துள்ள ட்விட்டர்.

by Editor / 02-07-2023 10:39:36am
 புதிய விதிமுறைகளை வகுத்துள்ள ட்விட்டர். சமூக ஊடகமான ட்விட்டரில் பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன. ட்விட்டர் பயனர்கள் மற்றவர்களின் ட்வீட்களைப் பார்க்க டிவிட்டரில் உள்நுழைய வேண்டும். மற்ற வாடிக்கையாளர்களின் ட்வீட்களை அவர்கள் இதுவரை உள்நுழையாவிட்டாலும் இணையத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் புதிய விதிகளின்படி அந்த வசதியை ட்விட்டர் நிறுத்தியுள்ளது. மேலும், சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 1000 ட்வீட்களை மட்டும் பார்க்க முடியும் எனவும் புதிய பயனர்கள் 600 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் இருந்து பெரிய அளவில் டேட்டா திருடப்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via