நெல்லை கண்ணன் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த 2019 டிசம்பர் 29 எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசியபோது பிரதமர் மோடி குறித்து அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக கூறி பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே சோலிய முடிக்கலையா என்று பேசப்பட்டது . அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி பாஜக ஆட்சியை முடிவுக்கு வரவில்லை எனும் நோக்கிலேயே அவர் பேசப்பட்டது. தவிர உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது . அப்போது நெல்லை கண்ணன் தரப்பு- அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
Tags :