விமான நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்.. ‌.

by Staff / 26-05-2023 04:28:03pm
விமான நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்.. ‌.

சென்னை விமான நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அபித்ஜன்னிலிருந்து அடிஸ் அபாபா வழியாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்த கவோடியா அடிங்கரா என்ற நபரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அவரது உடைமைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தூள் வடிவில் இருந்த 1999 கிராம் எடையுள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர். இதன் மதிப்பு 4 கோடி ரூபாயாகும்.

 

Tags :

Share via

More stories

Logo