நான் கட்சியை கலைச்சிட்டு போறேன் - அண்ணாமலைக்கு சீமான் சவால்

by Staff / 04-04-2024 04:20:11pm
நான் கட்சியை கலைச்சிட்டு போறேன் - அண்ணாமலைக்கு சீமான் சவால்

தங்கள் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பறித்தது பாஜக தான் என்று தொடர்ந்து சீமான் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அண்ணாமலையைப் பார்த்து, “நீ ராமர் பக்தர் தானே? நாம் இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வோம். அங்கு என்னுடைய சின்னத்தை நீ பறிக்கவில்லை என்று சத்தியம் செய்து கூறினால், நான் என்னுடைய கட்சியை கலைத்து விட்டு வீட்டுக்குப் போகிறேன். இந்த சேட்டை எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே. விவசாயிகளுக்காக ஐந்து வயதில் கம்யூனிஸ்ட் கொடியை பிடித்து சிவகங்கை கலெக்டர் ஆபீஸ்க்கு சென்றவன் நான்” என்று ஆவேசமாக பேசினார்.
 

 

Tags :

Share via