ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை-ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

by Editor / 11-04-2024 09:33:58am
ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை-ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடபடுகிறது.ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை  நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும்,நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் 
இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு  இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடுகின்றனர். 

இந்நிலையில் இந்த ஆண்டு  ஈகைத் திருநாள் எனப்படும்  ரமலான் பண்டிகையினை  முன்னிட்டு  ரமலான் சிறப்பு தொழுகை நாடுமுழுவதுமுள்ள பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது.இதில் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

 

Tags : ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை-ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Share via