தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.போலீசார் கூடுதல் பாதுகாப்பு.

மத்திய அமைச்சர் அமித்ஷா உடல்நலக்குறைவால் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட பயணம் ரத்துசெய்யப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அவரது தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கும் மத்திய அமைச்சர் தொடர்ச்சியாக அங்கு இருந்து சிவகங்கை புறப்பட்டு செல்கிறார். சிவகங்கையில் மூன்று 40 மணிக்கு ரோடுஷோ நடத்தும் அவர் 5 மணி அளவில் திருமயம் பகுதியில் உள்ள கோட்டை பைரவர் மற்றும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை சத்தியவாகேசவர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக அங்கிருந்து புறப்படும் அவர் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து 5.50 மணி அளவில் மதுரையில்
மதுரை திண்டுக்கல் ரோடு முருகன் கோவிலிருந்து தொடங்கி ஜான்சிராணி பூங்கா, தெற்காவணி மூலவீதி, வழியாக விளக்கு தூண் வரை நடைபெறவுள்ள ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.
13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தக்கலை செல்கிறார், தக்கலையில் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரித்து ரோஸ் ஷோ நடத்துகிறார், அதன் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் அவர் மூன்று மணி அளவில் நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக் கூட்டம் மேடையில் சிறப்புரை ஆற்றுகிறார், அதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலம் வரும் அவர் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தென்காசி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து ஆசாத் நகரில் இருந்து தென்காசி புதிய பேரூந்துநிலையம் வரை 6.30 மணி அளவில் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை ரோட் ஷோ நடத்துகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் இலஞ்சி இராமசாமி பிள்ளை மைதானத்திற்கு வந்து அங்கு இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமான மூலம் 11.30 மணியளவில் டெல்லி செல்கிறார்.அமித்ஷாவின் ரோட் ஷோவை முன்னிட்டு போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Tags : தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.