அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

முன்னாள் முதல்வரும்,சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும்,அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இபிஎஸ் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். கடந்த மாதமும் இதே தேதியில் சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.