கள்ளக்குறிச்சி அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர்பலி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணலூர்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுவாமிநாதன் மீது மோதி சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : கள்ளக்குறிச்சி அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர்பலி.