அரசுப் பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

by Staff / 22-10-2022 04:56:57pm
 அரசுப் பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் 3,417 காலிப்பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு, தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகைக்கேற்ப புதியப் பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய பணியிடங்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பணியாளர், வருவாய் மற்றும் கணக்குப் பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல், பொது சுகாதாரப் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் இயங்கி வரும் நிலையில் பணியிடங்களை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேவையை மேம்படுத்துதல், வருவாயை பெருக்குதல் உள்ளிட்ட காரணங்களுக்காக புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories