தோனி படத்தின் ஹீரோ

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. தற்போது அவர் தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் என்ற புதிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளது. தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ள கதையை தான் முதல் படமாக எடுக்கவுள்ளார். இந்த படத்தை "அதர்வா தி ஆரிஜின்" என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு, தனுஷு ராசி நேயர்களே, கசர தபர, வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :