தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் -தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம்.

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்தனர், பலரும் காயமடைந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 011-24193300 என்ற தொலைபேசி எண்ணிலும், 9289516712 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Tags : தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் -தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம்.