16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை

by Staff / 09-06-2024 04:09:16pm
16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் பெற்ற மகளை தந்தையே பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கசாப்புக் கடை நடத்தி வரும் சமன் சிங் என்பவர் தனது 16 வயது மகளை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் வெளியூர் சென்றதால், மகள் தந்தையுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், தந்தை தனது 16 வயது மகளை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.மீண்டும் வீட்டிற்கு வந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via