பெண் ஒருவர் கணவரின் இறந்த உடலின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் மனதை உலுக்கி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பெண் ஒருவர் தனது கணவரின் இறந்த உடலின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் மனதை உலுக்கி வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவரது மனைவி ரத்தக் கண்ணீருடன் நிலைகுலைந்து போய் அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இரங்கல் தெரிவித்ததுடன் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
Tags : பெண் ஒருவர் கணவரின் இறந்த உடலின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் மனதை உலுக்கி வருகிறது.