by Staff /
08-07-2023
02:07:00pm
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. தற்கொலைக்கு முதல் நாள் இரவு ஜூலை 6 ஆம் தேதி பாதுகாவலரிடம் துப்பாக்கி குறித்து அவர் விசாரித்துள்ளார். மேலும் விஜயகுமார் காவல்துறையில் இல்லாத அவரது நண்பர்களிடம் தற்கொலை சிந்தனை வந்து செல்வதாக கூறியுள்ளார். சமீப காலமாக மருத்துவர்களை மாற்றியும், மருந்துகளையும் மாற்றி மாற்றி டிஐஜி விஜயக்குமார் எடுத்துள்ளதாக கோவையில் ஏடிஜிபி அருண் தலைமையில் நடந்த காவல் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Tags :
Share via