இந்தியா கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

by Staff / 27-03-2024 12:18:24pm
இந்தியா கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்துள்ளது. 'பாஜகவின் 10 ஆண்டு செயல்பாடுகள் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை சிதைத்து வருகிறது. எனவே, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், திமுக தலைமை வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவெடுத்துள்ளது. தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்' என்று அதன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo