வெடித்து சிதறிய ஏசி.. உயிர் தப்பிய 4 வயது குழந்தை

by Editor / 23-06-2025 02:53:07pm
வெடித்து சிதறிய ஏசி.. உயிர் தப்பிய 4 வயது குழந்தை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீட்டில் திடீரென ஏசி வெடித்து சிதறிய விபத்தில், 4 வயது குழந்தை உயிர் தப்பியுள்ளது. அரசூர் பனைவிளையில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இருந்த ஏசி ஆஃப் செய்யப்பட்ட சிறிதுநேரத்தில் வெடித்துள்ளது. காலையில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள், மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஏசி வெடித்து தீப்பற்றியதும், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
 

 

Tags :

Share via