மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன் காளியம்மாள்

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் இன்னும் எந்த கட்சியிலும் சேராமல் இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "நாதகவுக்கு இது களையுதிர் காலம் என சீமான் கூறினார், நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாக எப்படி மாறினார்கள் என்று அண்ணன் பகுப்பாய்வு செய்ய வேண்டும். எல்லா கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வரத்தான் செய்யும். மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். முடிவை மே இறுதிக்குள் அறிவிப்பேன்” என்றார்.
Tags :