சித்தி கொடுமை சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத் (45). இவருக்கும் இவரது மனைவி சங்கீதாவுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து அமர்நாத் 2வதாக உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமர்நாத்தின் 2அவது மகள் நந்தினி (16) தந்தையுடன் வசித்து வந்தார். வீட்டு வேலைகளையும் செய்ய வைத்து சிறுமியை சித்தி உஷா கொடுமைப்படுத்தி வந்துள்ளார். உஷாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Tags : சித்தி கொடுமை சிறுமி தூக்கிட்டு தற்கொலை