ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் போலீசார் தீவிர கண்காணிப்பு.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை 05) சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது. இதில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழிக்குப்பழியாக அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் போலீசார் தீவிர கண்காணிப்பு.