தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளராக ஜெயபாலன் நியமனம்.

by Editor / 26-07-2023 11:45:19am
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளராக  ஜெயபாலன் நியமனம்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மணிப்பூரில்  நடந்த பெண்கள் வன்கொடுமை காரணமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினுடைய தென்காசி மாவட்ட ஊராட்சி  தலைவி தமிழ்ச்செல்வி தனக்கே இந்த மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத பொழுது மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைக்கு நீங்கள் போராட வந்திருக்கிறீர்கள் என கேட்டதை தொடர்ந்து மேடையில் சலசலப்பு ஏற்பட்டு மாவட்ட செயலாளராக இருந்த சிவ பத்மநாதனின் உதவியாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் தமிழ்ச்செல்வி ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசினர், இதன் தொடர்ச்சியாக இந்த வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இதன் தொடர்ச்சியாக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பதவி நீக்கம் செய்யப்பட்டு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழியின் ஆதரவாளரான சுரண்டை நகர திமுக செயலாளராக இருக்கும் ஜெயபாலன் என்பவரை திமுக தலைமை தெற்கு மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo