இபிஎஸ்-ஐ விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு
வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீாசர் முடிவு எடுத்துள்ளனர். புகார்தாரர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதற்காக, சொத்து பத்திரங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கில் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி மே 26ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
Tags :















.jpg)



