தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் -ஏற்பாடுகள் திவீரம்.
பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது இதை ஒட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது இங்கு தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன்ஆய்வு மேற்கொண்டார். மேலும் பரமக்குடி சந்தை பகுதியில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரன் மணி மண்டபம் அமைக்கப்பட்டு வருகின்றது இந்த பணிகளையும் அவர் பார்வையிட்டார் மேலும் நினைவிடத்திற்கு செல்லும் வழித்தடங்கள் வேந்தோணி கண்மாய் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கள் போடப்பட்டுவருகின்றன.
Tags : தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் -ஏற்பாடுகள் திவீரம்.