பெண்சாமியார் அன்னபூரணிக்கு 3 வது திருமணம் தன்னையும் கடவுள் என்று இணைந்து ஆசிய வழங்கிய கணவர் காட்சி.
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் பகுதிக்கு உட்பட்ட ராஜாதோப்பு பகுதியில் காலை 10:30 மணி முதல் 11.30 மணிக்குள் அன்னபூரணி அரசு ஆசிரமத்தில் இன்று அன்னபூரணி அரசு மற்றும் ரோஹித் ஆகியோரது திருமணம் நடைபெற்றது.தற்போது ஆசிரமத்தின் முகப்பில் மற்றும் உட்புறத்தில் வாழை மரங்கள் கட்டப்பட்டு மணமக்களை மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து ஆசிரமத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஹோம பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களிடம் ஆசி பெற்று தங்கத் தாலியை பக்தர்கள் எடுத்து தர அன்னபூரணிக்கு ரோகித் அணிவிக்க அன்னபூரணி- ரோஹித் திருமணம் நிறைவுற்றது.
தான் அம்மனின் மறு அவதாரம் என்றும் தான் கடவுள் என்று ஊரில் பேசி உலாவந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆசி வழங்கி வந்த பெண் சாமியார் அன்னபூரணிக்கு மூன்றாவது திருமணம் இனிதே நடைபெற்றது. அவரை திருமணம் செய்து கொண்ட ரோஹித் அன்னபூரணி அரசிடம் பல ஆண்டுகளாக பணியாளராக வேலை பார்த்தவர் தற்போது அவருக்கு தாலி கட்டியவுடன் தானும் கடவுள் போல் நினைத்துக் கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கி வருவது பெரும் நகைப்பாக உள்ளதாக சென்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags : பெண்சாமியார் அன்னபூரணிக்கு 3 வது திருமணம் தன்னையும் கடவுள் என்று இணைந்து ஆசிய வழங்கிய கணவர் காட்சி.