கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு 12 வருட சிறை தண்டனை, தலா 1 லட்ச ரூபாய் அபராதம்

மதுரையில் 2017 ம் ஆண்டு 104 கிலோ கஞ்சா கடத்தியது தொடர்பாக விஜயகுமார், செந்தில் வேலன், ராஜகோபால், ராமசந்திரன், சொக்கலிங்கம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் செந்தில்வேலன் இறந்த நிலையில் வழக்கில் மீதமுள்ள 4 பேருக்கு 12 வருட சிறை தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபாதமும் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹர குமார் உத்தரவு
Tags : கஞ்சா கடத்திய வழக்கில் 12 வருட சிறை தண்டனை,