உடலுறவுக்கு மறுத்த கள்ளக்காதலி கொலை

by Staff / 17-06-2024 03:25:31pm
உடலுறவுக்கு மறுத்த கள்ளக்காதலி கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவரின் மனைவி சுமதி (42). ஜவுளிக்கடைக்கு வேலைக்கு செல்லும் சுமதிக்கு, வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (30) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த சுமதியின் உறவினர் கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்துவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் சுமதி. மேலும் கடைசியாக ஒரு முறை உல்லாசமாக இருக்க மாரிமுத்து அழைத்துள்ளார். இதற்கு சுமதி மறுக்கவே, ஆத்திரமடைந்த மாரிமுத்து இன்று சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் வைத்து சுமதியை ஓட ஓட குத்திக்கொலை செய்தார். இதனையடுத்து மரிமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories