தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் மின் கணக்கிட்டாளர் மொபைல் போன் வாங்குவதற்கு ரூபாய் 10,000 உதவித்தொகை

by Admin / 06-07-2026 01:55:07am
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் மின் கணக்கிட்டாளர் மொபைல் போன் வாங்குவதற்கு ரூபாய் 10,000 உதவித்தொகை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் மின் கணக்கிட்டாளர்கள் 7,500 பேருக்கு புதிய ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்குவதற்கு ரூபாய் 10,000 உதவித்தொகை வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் மின் மீட்டர் அளவுகளை துல்லியமாக கணக்கிட்டு செயலி மூலம் நுகர்வோரின் மின் பயன்பாட்டு விவரங்களை உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்ய இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஊழியர்களின் பணி சுமையை குறைக்கவும் டிஜிட்டல் மயமாக்களை ஊக்குவிக்கவும் கணக்கெடுப்பு பணிகளில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கவும் இது உதவுகிறது .தங்கு தடையற்ற இணைய சேவை மற்றும் அழைப்பு வசதிக்காக ஊழியர்களுக்கு போஸ்ட் பெய்டு முறையில் சிம் கார்டுகள் வழங்கப் பட உள்ளது. இந்த மொபைல் போன் வாங்குவதற்கான ரூபாய் 10,000 நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது. ஒரு முறை இத்தொகையை பெற்றுக் கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் இந்த வசதியை பெற முடியும் என்றும் ஊழியர்கள் தங்களின் சொந்த மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதால் அவை அடிக்கடி பழுதடைவதாக விடுத்த கோரிக்கை ஏற்று அரசு இந்த உ த்தரவை பிறப்பித்துள்ளது.

 

 

Tags :

Share via

More stories

Logo