அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுவாக இருப்பதாக -துணை பொதுச்செயலாளர் கே. பி .முனுசாமி

by Admin / 06-07-2026 02:11:12am
 அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுவாக இருப்பதாக -துணை பொதுச்செயலாளர் கே. பி .முனுசாமி

கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே. பி .முனுசாமி செய்தியாளர்களை சந்திக்கையில், ஒரு உண்மையான அதிமுக தொண்டனின் கண்கள் கட்சியை வழிநடத்த நமது பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை தவிர வேறு யாரையும் பார்க்காது என்றும் அறுபது ஆண்டு கால பாரம்பரியமிக்க ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்கு நேற்று வந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம். அண்ணாமலைக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடி கொடுப்பதற்காகவே சிலர் இதுபோன்ற வீண் செய்திகளை பரப்பி வருகின்றனர் . அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பட்டியிலிருந்து ஆட்டுக் கூட்டம் ஓடுவது போல புஸ்ஸி ஆனந்தை பார்க்க ஓடுகிறார்கள். கட்சியின் தலைவரை கூட அவர்களால் பார்க்க முடிவதில்லை. அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்குச் சென்ற விஜயபாஸ்கர் போன்றவர்கள் ஓடுகாலிகள்;. சந்தர்ப்பவாதிகள்;  துரோகிகள். லெட்டர் பேட் வைத்து ஏமாற்றியவர்கள் மட்டுமே அங்கு ஓடி உள்ளனர் .அதிமுகவும் தமிழக வெற்றிக்கழகமும் இணையும் என்று கூறும் தமிழக வெற்றிக்கழக அமைச்சர் ஆதவ் அர்ச்சுனாவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது இரண்டு ஆண்டுகளில் பல கட்சிகள் மாறியவர் அவர் 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுகவை த. வெ .கவுடன் இணையும் என்று அவர் இனிமேல் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo