டெல்டா பாசன- குடிநீர் தேவைகளுக்காக 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை நேரில் சென்று திறக்கவுள்ளார் முதலமைச்சர்
தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரி படுகையில் போதிய மழைப்பொழிவு செய்யாத நிலையில் டெல்டா மாட்ட விவசாயிகளின் கோரிக்கை மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக தமிழக முதலமைச்சர் விஜய் காவிரி டெல்டா பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைகளுக்காக செப்டம்பர் 1 2026 முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நேரில் சென்று திறக்கவுள்ளார். முதலமைச்சர் நேரில் வந்து அணையை திறப்பதை ஒட்டி மேட்டூர் அணையில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags :


















