அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு..

அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்திரா உள்பட பல ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பிரம்மபுத்திரா உட்பட 13 முக்கிய ஆறுகள் கன மழை காரணமாக நிரம்பி உள்ளன. மேலும் இந்த ஆறுகளின் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது
Tags :