டேட்டிங் சென்ற இளைஞருக்கு பாலியல் தொல்லை

by Staff / 05-08-2023 03:48:32pm
டேட்டிங் சென்ற இளைஞருக்கு பாலியல் தொல்லை

டெல்லியில் டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணுடன் வாலிபர் ஒருவர் உணவகத்துக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சாப்பிட்ட பிறகு பில் தொடர்பான பிரச்சனையில், அந்த பெண், கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் அந்த உணவக ஊழியர்கள் அந்த இளைஞரை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via