திருப்பதியில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்..

திருமலை திருப்பதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி பரமேஷ்வர் ரெட்டி விளக்கம் அளித்தார். திருமலையில் பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். திருமலை மலையில் பயங்கரவாதிகள் இருப்பதாக போலீசாருக்கு மின்னஞ்சல் வந்தது. டிடிடி விஜிலென்ஸ் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த அஞ்சல் போலியானது என்று தெரியவந்ததால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :