இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஆட்சியர் ஆய்வு.
அரசு உத்தரவுபடி இருளர் வசிக்கும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மாவட்ட கலெக்டர் திடிரென்று நேரில் ஆய்வு செய்தபோது சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் வசிக்கும் சுமார் 30- ஆண்டுகளுக்கு மேலாக 20 -ம் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதேபோன்று அன்னை தெரசா நகர் பகுதியில் 50- தொகுப்பு வீடுகளில் நரிக்குறவர் வசித்து வருகின்றனர்.
தமிழக அரசு உத்தரவுபடி உ.கீரனூர் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசிக்கும் இருளர் இன மக்களை நேரில் சந்தித்து தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் எவ்வளவு நாளாக வசித்து வருகிறார்கள்.
தற்போது மழை நீர் ஓலைக் குடிசையின் மேல் கூரை வழியாக மழை நீர் சொட்டுகிறது.
பிள்ளைகள் எல்லோரும் படிக்கிறார்களா எங்கு படிக்கிறார்கள், ஏன் இன்று பள்ளிக்கு செல்லவில்லை ஜாதி சான்று உள்ளதா, அரசு அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகட்டி கொடுத்தால் நீங்கள் அனைவரும் குடியிருக்கின்றீர்களா, என்ன தொழில் தெரியும், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை உள்ளதா என இருளர் இன மக்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டபோது, இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்கு வீடுகட்டி கொடுத்தால் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு வசதியாக இருக்கும், நாங்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்த வசதியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
பின்னர் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் மற்றும் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதம் ஏற்பட்டு இடிந்து விழும் அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டுவதற்காக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அவர்கள் வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தனி, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள், இருளர் இன மக்கள் உடன் இருந்தனர். இருளர் இன மக்கள் வசிக்கும் ஓலைக் குடிசையில் சூரியா நடித்த ஜெய் பீம் படம் வைத்துள்ளனர்.
Tags :