மாமியார், மருமகள் கொலை இரண்டு வாலிபர்கள் கைது

by Staff / 17-08-2023 12:50:07pm
மாமியார், மருமகள் கொலை இரண்டு வாலிபர்கள் கைது

மதுரை எல்லீஸ் நகர் போடி லைனைச் சேர்ந்தவர் மணிகண்டன் 42. எஸ். எஸ். காலனி போலீஸ் ஸ்டேஷன் அருகே வசிக்கிறார். டிராவல்ஸ் நடத்தி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் கம்பம் அழகுபிரியாவை 22, திருமணம் செய்தார்.குழந்தை இல்லை. இவர்களுடன் மணிகண்டனின் தாய் மகிழம்மாள் 65, வசித்து வந்தார்.இதனால் துவரிமானைச் சேர்ந்த மணிகண்டனின் அக்கா மகாலட்சுமி, அவரது மகன் குணசீலன் 20, அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றனர்.இந்நிலையில் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய மணிகண்டன், நேற்று மதியம் வீட்டின் பின் அறைகளில் அடுத்தடுத்து அம்மாவும், மனைவியும் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தொடர்விசாரணையில் மணிகண்டனின் அக்கா மகன் குணசீலனும், ரிஷியும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். நேற்று முன்தினம் மதியமே கொலை செய்துள்ளனர். குணசீலன் ஒரு பெண்ணை காதலித்ததற்கு மணிகண்டன், தாய், மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். குணசீலனும் ரிஷியும் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories