குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
கோத்தகிரி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 71 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த இரண்டரை வயது குழந்தைக்கு, அப்பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவர் புஷ்பராஜை கைது செய்து குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாவட்டம் இட்ட மொழியில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சமையல் மாஸ்டர் மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :








.jpg)









.jpg)
