சக்கர நாற்காலியில் நீதிமன்றத்தில் ஆஜரான லாலு

by Staff / 15-03-2023 04:05:01pm
சக்கர நாற்காலியில் நீதிமன்றத்தில் ஆஜரான லாலு

 நில மோசடி வழக்கின் விசாரணை டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்றது. பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சக்கர நாற்காலியில் வந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக லாலு பிரசாத் யாதவுக்கு சமீபத்தில் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி மற்றும் மகளும், ஆர்ஜேடி எம்பியுமான மிசா பார்தி ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

 

Tags :

Share via

More stories