சட்டப் படிப்பு..விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் எல்.எல்.பி சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 25 ஆம் தேதி மாலை 05:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Tags :