மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 90 செ.மீ மழைப்பொழிவு பதிவு.

by Staff / 22-10-2025 10:52:16am
மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 90 செ.மீ மழைப்பொழிவு பதிவு.

மதுரை மாவட்டத்தில்  நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மாவட்ட முழுவதிலும்  90 செ.மீ (906.7 மி.மீ) மழை பொழிவு பதிவாகியுள்ளது.மாவட்ட முழுவதும் சராசரியாக 4 செ.மீ (41.21 மி.மீ) மழை பெய்துள்ளது.மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக கள்ளந்திரி பகுதியில் 8 செ.மீ மழைப்பொழிவும் மேட்டுப்பட்டி , பெரியபட்டி மற்றும் மதுரை மாநகர் வடக்கு பகுதி பகுதிகளில் தலா 6 செ.மீ மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.குறைந்தபட்ச மழையாக கள்ளிக்குடி பகுதியில் 1.5 செ.மி மழை பதிவாகியுள்ளது.
வைகை அணையில் இருந்து 3073 கன அடி நீரும், முல்லை பெரியாறு அணையிலிருந்து 1655 கன அடி நீரும் வெளியேற்றம்.சாத்தையாறு அணையில் தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் நீர் வெளியேற்றம் இல்லை.
நேற்று பெய்த மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் இரண்டு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

 

Tags : மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 90 செ.மீ மழைப்பொழிவு பதிவு

Share via
Logo