by Staff /
12-07-2023
01:07:26pm
ஐதராபாத்தில் உள்ள குஷைகுடா பகுதியில் வசிக்கும் கல்யாணி என்ற பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படவே கல்யாணி தனது 4 வயது மகள் தன்விதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணிக்கு தனது உறவினரான நவீன் (19) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இவர்களின் இந்த உறவுக்கு குழந்தை தடையாக இருப்பதாக நினைத்து ஜூன் 2ஆம் தேதி மகள் தன்விதாவின் முகத்தில் தலையணையை வைத்து கல்யாணி கொலை செய்துள்ளார். கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் கல்யாணியை கைது செய்தனர்.
Tags :
Share via