தரமற்ற முறையில் அசைவ -சூப் தயாரித்த கடைக்கு அபராதம்.
மதுரை காளவாசல் பைபாஸ் சாலை பகுதியில் சாலையோர கடையாக ரஹீம் பாய் சூப் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு தரமற்ற முறையில் அசைவ சூப் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடையில் மட்டன் சூப் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் அளித்தனர்.
Tags : தரமற்ற முறையில் அசைவ -சூப் தயாரித்த கடைக்கு அபராதம்.


















