நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் படுக்கைக்கு அருகில் அதிசய கிணறு

by Editor / 02-12-2021 03:32:37pm
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் படுக்கைக்கு அருகில் அதிசய கிணறு

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா ஆயன்குளம் பகுதியில் நம்பியாறு தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறு குறித்து  ஐ ஐ டி நிபுணர்கள் குழு  இன்று  திசையன்விளை அருகே உள்ள  ஆயன்குளம் அதிசய கிணற்றை ஆய்வு செய்ய  வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணை தேக்கத்திலிருந்து இன்று காலை 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நம்பியாறு கால்வாய் செல்லும் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. திசையன்விளை க்கு அருகில் உள்ள ஆயன்குளம் படுகை நிரம்பி தண்ணீர் வழிந்து படுகைக்கு அருகிலுள்ள இரண்டு அதிசய கிணற்றுக்குள் செல்கிறது. என்னதான் அதிசயம் அந்த கிணற்றில்?

"கிணத்தையை காணோம். கிணறு எங்க போச்சுன்னே தெரியல. இந்த வசனம் திரைப்படத்தில் வரும் நெல்லை சிவாவின் எல்லோரும் அறிந்த  காமெடி வசனம். இதுபோல் நெல்லை மாவட்டம் ஆயன்குளம் படுக்கைக்கு அருகில் உள்ள கிணற்றில் செல்லும் தண்ணீர் எங்க போகுதுன்னே தெரியல ? என்பதுதான் இந்தக் கிணற்றின் அதிசயம். 

மழைக்காலம் மற்றும் அணை திறப்பு காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எவ்வளவு நீர் இந்த கிணற்றுக்குள் சென்றாலும் தண்ணீர் எங்க போகுதுன்னே  தெரியல. இதுவரை கிணறு நிரம்பிய சரித்திரமே கிடையாது என்பதுதான் அதிசயம்

மேலும் இந்த கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் இப்பகுதியை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், நிலத்தடி உப்புத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறவும்  பயன்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த கிணற்றின் மீது தனி கவனம் செலுத்தி வீணாக கடலுக்கு செல்லும் உபரி நீரை ஆயன்குளம் அதிசய கிணற்றுக்குள் திருப்பி விட்டால் இப்பகுதியிலுள்ள விவசாய மக்கள் பயன்படுவதோடு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கடல் நீர்மட்டம் நிலத்தடி நீருக்குள் புகாமல் தடுத்து உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வளவு தண்ணீர் வந்தாலும் தனக்குள் ஏற்றுக் கொள்ளும் இந்த அதிசய கிணறு சுற்றுலாப் பயணிகள் போல் பல பகுதிகளிலிருந்து வாகனங்களில் வந்து  மக்கள் பார்த்து செல்கின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் படுக்கைக்கு அருகில் அதிசய கிணறு
 

Tags :

Share via