வெள்ளசேதங்களை பார்வையிட தூத்துக்குடி வந்தார் முதல்வர்

by Editor / 02-12-2021 02:27:58pm
வெள்ளசேதங்களை பார்வையிட தூத்துக்குடி வந்தார் முதல்வர்

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை:  விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.முதல்வருடன்  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிகருணாநிதி மற்றும் அமைச்சர்களும் உடன் வந்தனர்
 தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்கள்.
(Tentative Programme)

(1) ப்ரையன்ட் நகர் (Bryant Nagar) - மழைநீர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுதல்.

(2) மாநகராட்சி அலுவலகம் - ஆய்வுக் கூட்டம்.

(3) அம்பேத்கர் நகர் - மழைநீர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுதல்.

(4) எட்டையபுரம் மதுரை சாலையில் உள்ள ஏ.வி.எம். மஹாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குதல்.

(5) முத்தமிழ் குடியிருப்பு, ரஹ்மத் நகர், எட்டையபுரம் - மதுரை சாலை (ஏ.வி.எம். மஹால் எதிரில்) - மழைநீர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுதல்.

(6) நிலா கடல் உணவுகள் அருகில் புதிய நீர் அகற்றும் பாதைப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிடுதல்.

வெள்ளசேதங்களை பார்வையிட தூத்துக்குடி வந்தார் முதல்வர்
 

Tags :

Share via

More stories