திருமண விழாவில் பாம்பை வைத்து வித்தை காட்டிய நபர்யை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

ஒடிசாவில் கடந்த புதன்கிழமை கரண்ஜியா நகரில் நடந்த திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து ஆட்டம் ஆடி 5 பேர் வித்தை காட்டினர். கூடையில் இருந்து வெளியே வரும் பாம்பை கொண்டு வித்தை காட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. பாம்பு பிடி வீரர் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை மீட்டனர் தப்பியோடிய 5 பேரை மடக்கி பிடித்த வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
Tags :